சென்னை :குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை, சிந்தாதிரிப் பேட்டை தலைமை அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதில், 'டேட்டா' சென்டர் மையத்தில், புதிய மின்சார கேபிள்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், வரும் 28 மற்றும் 29ம் தேதி, சென்னை குடிநீர் வாரிய இணையதள சேவைகள் நிறுத்தப்படும். இதன் வாயிலாக பெறப்படும், குடிநீர், கழிவு நீர் வரி செலுத்துவது, லாரி குடிநீர் பதிவு செய்வது, புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பது, குறை தீர்வு போன்ற சேவைகள் செயல்படாது.
இதனால், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளில் லாரி குடிநீர் வழங்கப்படும். 30ம் தேதி காலை 10:00 மணி முதல் இணையதள சேவைகள் வழக்கம் போல செயல்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.