நுங்கம்பாக்கம், நுங்கம்பாக்கம், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும் 28ம் தேதி சுவாமி வீதியுலா நடக்கிறது.
நுங்கம்பாக்கம் பகுதி, பத்மாவதி உடனுறை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும் 28ம் தேதி, 'ரத சப்தமி' சிறப்பு வழிபாடு நடக்கிறது.உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கம் தை மாதம்.
இம்மாத வளர்பிறையில், 7ம் நாள் வரும் சப்தமி திதி,'ரத சப்தமி'யாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அன்றைய தினம் கோவில் மாட வீதிகளில், காலை 6:00 மணிக்கு சூரிய வாகனத்திலும், காலை 9:00 மணிக்கு கருட வாகனத்திலும், சுவாமி வீதியுலா நடக்கிறது.
இதைத்தொடர்ந்து காலை 11:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்க உள்ளது.
மாலை 6:00 மணிக்கு சந்திர வாகனத்தில், மீண்டும் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது. மேலும், சுவாமிக்கு அன்றைய தினம் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடக்க உள்ளன.