வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கவர்னர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவை, முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். கவர்னர் தமிழிசை தேசியக்கொடியேற்றிய நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.
இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆனால், இந்த விழாவில் பங்கேற்காமல், முதல்வர் சந்திசேகர ராவ் புறக்கணித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.