ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதி சேர்ந்தவர், கிருஷ்ணராஜ், 47. பா.ம.க., முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவரான இவர், மீனா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
நேற்று, நள்ளிரவு, 12:30 மணியளவில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவி மீனாவை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வளர்ப்பு மகன் விக்னேஷ், 27, தனது தாயை எதற்கு திட்ட வேண்டும் என, கிருஷ்ணராஜியை அரிவாளில் ஓட, ஓட விரட்டி கொலை செய்துள்ளார். ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷ் கைது செய்து, விசாரிக்கின்றனர்.