மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ராஜதோட்டம் சாய் விளையாட்டு மையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 398 பயனாளிகளுக்கு 9 கோடியே 31 லட்சத்து 24 ஆயிரத்து 416 மதிப்பீட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 168 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல்துறையின் சிறப்பாக பணியாற்றிய 12 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதோடு, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
மதுரையில் தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர்
மதுரை: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து புறாக்களை பறக்க விட்டார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பல்வேறு துறையைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய 250 அரசு ஊழியர்களுக்கும், 217 போலீசாருக்கும் சான்றிதழ் வழங்கினார். ஏழு பள்ளிகளை சேர்ந்த 291 மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பி.ஆர்.ஓ., சாலி தளபதி ஏற்பாடுகளை செய்திருந்தார். தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க், கமிஷனர் நரேந்திர நாயர், டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., சிவபிரசாத், டி. ஆர்.ஓ., சக்திவேல் கலந்து கொண்டனர்.