வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடும் பாதுகாப்புக்கு இடையே, 74வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்முவின் நார்வலில் சமீபத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இதையடுத்து பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஜம்மு - காஷ்மீர் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தை யொட்டி, ஜம்மு காஷமீரில் மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 74வது குடியரசு தினம் ஜம்மு காஷ்மீரில் கடும் பாதுக்காப்புக்கு இடையே கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மக்கள் ஆர்வம்: குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் உள்ள கடிகார கோபுரத்தின் மேல் மூவர்ணக்கொடி உயரமாக பறந்தது. இதன் முன், நின்று மக்கள் போட்டோ எடுத்து வருகின்றனர். மூவர்ணக்கொடி உயரமாக பறக்கும் காட்சி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.