வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டில்லியில் கர்த்வயா பாதையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

இந்நிலையில், டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை செலுத்தினார். அப்போது, முப்படை தளபதிகள் உடன் இருந்தனர்.
