ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 3ம் தேதி துவங்குகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் அ. தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.