ஆம்பூர்: வேலுார் மாவட்டம், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முகமது காசிம், 26. சென்னை சோழிங்கநல்லுார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 23. மிட்டாய் வியாபாரிகளான இவர்கள் இருவரும் பல்சர் பைக்கில், திருப்பத்துார் மாவட்டம், வணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆம்பூர் அருகே மின்னுார் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, குடியாத்தம் அடுத்த காரம்பட்டி பகுதியிலிருந்து பின்னால் வந்த யமகா பைக் இவர்கள் மீது மோதியது. இதில் இரு பைக்குகளும் கவிழ்ந்தது.
இதில் பல்சர் பைக்கில் சென்ற, காசிம், அருண்குமார் காயமடைந்தனர். மேலும் யமகா பைக்கில் சென்ற சுசில்குமார், 15, பெருமாள், 35, ஆகிய இருவர் உயிரிழந்தனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.