சென்னை: வரும் ஜன., 28,29,30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை(ஜன.,27) தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வரும் ஜன.,28 முதல் ஜன.30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று(ஜன.,26) முதல் ஜன.28 வரை நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் - தென்கிழக்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீசும். ஜன.29, 30 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசம். இப்பகுதிகளுக்கு மீனவர்களுக்கு இன்று(ஜன.,26) முதல் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.