வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரஷ்யா அதிபர், நேபாள பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி
ரஷ்ய அதிபர் புடின்

குடியரசு தின வாழ்த்துகளை ஏற்று கொள்ளுங்கள். பொருளாதாரம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சாதனை அனைவராலும் அறியப்பட்டது. உலக ஸ்திரத்தன்மைக்கும், பிராந்திய மற்றும் சர்வதேச திட்டங்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கு இந்தியா ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தகால்

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, இந்திய அரசு, இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
வெளிநாடுகளில் உற்சாக கொண்டாட்டம்


சவுதி அரேபிய தலைநகரில், இந்திய குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் சுகேல் கான், இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதியின் உரையை வாசித்தார்.

தஜகிஸ்தானின் துஷான்பே நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் விராஜ் சிங், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டனர். தேசியக்கொடி ஏற்றியதும் அனைவரும் தேசிய கீதம் பாடினர்.