வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பாரத்பயோடேக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தான இன்கோவேக் தடுப்பு மருந்து இன்று (ஜன.,26) மத்திய அமைச்சர்கள் மண்சுக் மாண்டவியா, ஜிகேந்தர் சிங் டில்லியில் அறிமுகம் செய்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை, இன்கோவேக்சினை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு டிச., 23ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் பாரத்பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தான இன்கோவேக் தடுப்பு மருந்து இன்று(ஜன.,26) மத்திய அமைச்சர்கள் மண்சுக் மாண்டவியா, ஜிகேந்தர் சிங் டில்லியில் அறிமுகம் செய்தனர்.
உலகின் முதன் முறையாக மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடூப்பூசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.