சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பிருந்தாவனத் தோப்பில், ராம அழகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது.
கடம் புறப்பாட்டை தொடர்ந்து, ஸ்ரீ ராம அழகர், லட்சுமி நாராயண பெருமாள், ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார் கோயில்களுக்கான கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
மூலவர் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.