வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கங்கை நதியில் கரைக்கப்படும் இறந்தவரின் சாம்பல் எழுப்பும் ஒலி பாரத் மாதா கி ஜெய் ஆகும் என மத்திய அமைச்சர் ஸ்மிதிஇரானி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![]()
|
நாட்டின் 74 வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு தலைவர்களும் தங்களின் தனித்துவமான வழியில் வாழ்த்துக்களை அனுப்பி வைப்பது வழக்கம் அந்த வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிதி இரானியின் வாழ்த்து கூறிய வீடியோ அனைவரையும் கவர்ந்ததுடன் அவை சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது.
அவர் வீடியோவில் பதிவிட்டு இருப்பதாவது: இந்தியா ஒரு துண்டு நிலம் அல்ல. இது வாழும் நாடு, வணக்கங்களின் நாடு, வாழ்த்துக்களின் நாடு, இது காணிக்கைகளின் நாடு, இது கடவுளின் நாடு என மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதாக இரானி கூறி உள்ளார்.
![]()
|
அது மட்டுமல்லாது கங்கை நதி நமக்கானது. அதில் உள்ள ஒவ்வொரு கூழாங்கற்களும் நமக்கு சிவபெருமான். இந்தியாவுக்காக சாவோம். இறந்த பின்னரும் கங்கை நீரில் கரைக்கப்படுகிறது. அந்த நீரின் சத்தத்தை கேட்டால் ஒரே சத்தம் தான் வரும் அது பாரத் மாதா கி ஜெய் என் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement