மதுக்கரை:க.க.சாவடியை அடுத்துள்ள தேச பக்தி கோட்டையில், ஜெய் ஹிந்த் பவுண்டேஷன், கோவை மாவட்ட அனைத்து ஜமா -அத், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில், 74வது குடியரசு தின விழா நேற்று, நிறுவனர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தேசிய கொடி ஏற்றினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சுதந்திர விழா, குடியரசு நாட்களில் கொடியேற்றி, இனிப்பு சாப்பிடுவது மட்டும் நம் கடமையல்ல. நாட்டை முன்னேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்று செயல்பட வேண்டும்,'' என்றார்.
கோவை மாவட்ட அனைத்து ஜமா- அத் தலைவர் பேசுகையில், இஸ்லாமியர்கள் தாங்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு தாய் நாடு.
''இது குரானில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தெரியாமல் பலரும் செயல்படுகின்றனர். இதில் மாற்றம் வர வேண்டும், என்றார்.
மத்திய அரசு முன்னாள் கூடுதல் வக்கீல் சுப்ரமணியம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு உட்பட திரளானோர் பங்கேற்றனர்.