சிங்கம்புணரி, : சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் பூட்டி கிடப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்காக குடிநீர் தொட்டி இருந்தது. கடந்த மாதம் அங்கு சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. ஓரிரு நாள் மட்டும் செயல்பட்ட நிலையில் இயந்திரத்தை பேரூராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது. குழாய்களை உடைத்து விடுவதால் பேரூராட்சி நிர்வாகம் அப்படியே விட்டுவிட்டது. எனவே உரிய பாதுகாப்பு வசதியுடன் குழாய்களை மீண்டும் சரி செய்து பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.