கோவை:'ராபர்ட் பாஷ் பொறியியல் மற்றும் வணிகத் தீர்வு' நிறுவனம், டயர் 2 போக்குவரத்து வினியோகஸ்தர்களுக்கான அதன் முதல் வாகன சரிபார்ப்பு மையத்தை, கோவையில் துவக்கியுள்ளது.
இந்த மையத்தில், வாகன சரிபார்ப்பு மற்றும் பொறியியல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பிரத்யேக கட்டமைப்புகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
முழுமையான பொறியியல் திட்டங்களை கையாண்டு, தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் வகையில், 'எண்டு டு எண்டு' பொறியியல் திறன் கொண்ட மையமாக இந்த மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஷெனாய் கூறியதாவது:
புதிதாக கோவையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மையம், இந்நிறுவனத்தின் முதலீட்டு விருப்பத்தையும், போக்குவரத்து திறனை அதிகரிக்கும் ஈடுபாட்டையும் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் இது, இந்திய போக்குவரத்து வலிமையை அதிகரிப்பதற்கான முதல் அடி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.