புதுடில்லி:'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், இந்தியாவின் போக்குவரத்து நிலைத்தன்மை சூழலை வளர்க்க 'போக்குவரத்து நிலைத்தன்மை' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்தியாவில் முதல் முறையாக நடத்தியுள்ளது.
இந்த கலந்துரையாடல், பசுமையான, மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து நிலைத்தன்மையை கருவாகக் கொண்டு, நடத்தப்பட்டு உள்ளது.
கார்பன் இல்லாத எரிசக்தி, தொழிற்சாலை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை உருவாக்குவதற்கான எதிர்கால தேவைகளை உணர்த்தும் வகையில் உரையாடல் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுமத் தலைவர் ஓலா கலெனியஸ், நிர்வாக குழும உறுப்பினர் ரெனாடா ஜுங்கோ ஆகியோர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், வணிகக் கூட்டாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பென்ஸ் நிறுவனத்தின், 'பி விஸ்சனர்ஸ்' என்ற திட்டத்தின் வாயிலாக, ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்பாளர்களுக்கு தேவையான பயிற்சி, நிபுணத்துவம், மற்றும் நிதி ஆகியவற்றை வழங்க, முனைப்பு காட்டி வருவதாகவும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.