சென்னை:'ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா' நிறுவனம், அதன் 'பிரீமியம் பைக்' விற்பனை மையமான 'பிக் விங்' விற்பனை மையத்தை, சென்னையின் அண்ணா நகர் பகுதியில் துவக்கியுள்ளது.
சி.பி.ஆர். 300 எப்., சி.பி. 300 ஆர்., சி.பி.ஆர். 1000 ஆர்.ஆர்.ஆர். பயர் பிளேடு' உள்ளிட்ட 300 சி.சி., முதல் 500 சி.சி., வரை உள்ள பிரீமியம் பைக்குகள், இந்த பிக் விங் விற்பனை மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பிக் விங் விற்பனை மையங்களை வைத்துள்ள ஹோண்டா, தமிழகத்தில், 11 விற்பனை மையங்களை இயக்கி வருகிறது.