ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க.,வில்..111 பேர் பணிக்குழு!

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 26, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, அ.தி.மு.க., சார்பில், 111 பேர் இடம் பெற்றுள்ள மிகப்பெரிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான இக்குழுவினரை, இடைத்தேர்தல் பணியில் களமிறக்கவும், ஜெயலலிதா பாணியில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிரடி காட்டவும், பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன் வாயிலாகவிமர்சனங்களை முறியடித்து, கட்சியை தன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், அ.தி.மு.க.,,.111 பேர் பணிக்குழு!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக, அ.தி.மு.க., சார்பில், 111 பேர் இடம் பெற்றுள்ள மிகப்பெரிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான இக்குழுவினரை, இடைத்தேர்தல் பணியில் களமிறக்கவும், ஜெயலலிதா பாணியில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிரடி காட்டவும், பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன் வாயிலாகவிமர்சனங்களை முறியடித்து, கட்சியை தன் வசமாக்கவும் மும்முரம் காட்டி வருகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்., 27ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலானது ஆளுங்கட்சியை விட, எதிர்க்கட்சிகளுக்கு அக்னி பரீட்சையாக அமைந்து உள்ளது.

காரணம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பிளவுபட்டுள்ளது. பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையில், அக்கட்சியினர் தனித்தனியே இயங்குகின்றனர்.

வேட்பாளருக்கு சின்னம் கோரும் படிவத்தில், இருவரும் கையெழுத்திட்டால் தான், இரட்டை இலை சின்னத்தை பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதுகுறித்து கவலைப்படாமல், இடைத்தேர்தலில் போட்டியிட்டு, கட்சி தன் பக்கம் உள்ளதை நிரூபிக்க, பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதனால், கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா.,விடம் பேசி, இம்முறை அ.தி.மு.க., போட்டியிடும் என்று அறிவித்தார்.

அதற்கு போட்டியாக பன்னீர்செல்வமும், 'அ.தி.மு.க., சார்பில், நாங்கள் போட்டியிடுவோம். பா.ஜ., போட்டியிட்டால், அதற்கு ஆதரவு அளிப்போம்' என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். யாருக்கு ஆதரவு அளிப்பது என தெரியாமல், கூட்டணி கட்சியான பா.ஜ., திணறி வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா பாணியில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிரடி காட்டவும், தனக்கு எதிரான விமர்சனங்களை முறியடித்து கட்சியை வசமாக்கவும், பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

ஜெயலலிதா ஆளும் கட்சியாக இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்த போதும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, முக்கிய நிர்வாகிகள் அனைவரையும், தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிப்பார்.

ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். அவர்களுக்கு கீழ் மற்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.

அவர்கள் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகளில், அதிக ஓட்டுகளை அ.தி.மு.க., வேட்பாளருக்கு பெற்றுத் தர வேண்டும். தவறினால், கட்சிப் பதவியை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, பொறுப்பாளர்கள் அனைவரும் அதிக ஓட்டுகளை பெற, அனைத்து வழிகளையும் கையாளுவர்.

அதே பாணியை பின்பற்றி, நேற்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில், 111 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை பழனிசாமி அறிவித்துள்ளார்.

இக்குழுவில், கே.பி.முனுசாமி, விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி உட்பட, 51 முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் மத்தியஅமைச்சர் தம்பிதுரை, மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

'அனைவரும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தல் பணிகளை ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளித்து, வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்' என, பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், 23ம் தேதி முதல் நேற்று வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விரைவில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது. இது தொடர்பாக, நேற்று ஈரோட்டில் கட்சியினருடன் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அவரது அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பும் தேர்தல் பணிகளை துவக்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு உள்ளது.

இரு தரப்பும் போட்டியிடுவதில் மும்முரமாக இருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சியான பா.ஜ., நிலைப்பாடு என்ன என்பது, அனைவரின்எதிர்பார்ப்பாக உள்ளது.

விரைவில் வேட்பாளர் அறிவிப்பு'

''ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.பன்னீர்செல்வம் நேற்று காலை, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.பின், தன் குலதெய்வ கோவிலான செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவிலில், மதியம் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ''ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்,'' என்றார்.


- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

Fastrack - Redmond,இந்தியா
27-ஜன-202313:38:21 IST Report Abuse
Fastrack பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார். ...அவர் மட்டுமா ..சிலர் கனிகளையும் நகத்துவங்க …
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-ஜன-202312:00:52 IST Report Abuse
Duruvesan டெபாசிட் கிடைப்பது கடினம்
Rate this:
Cancel
Tamil Selvan - Salem,இந்தியா
27-ஜன-202311:26:51 IST Report Abuse
Tamil Selvan எனக்கு தெரிந்த வரைக்கும் செங்கோட்டையன் தான் அ தி மு க தலைவராகும் ஒரே தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது. இவர் எதாவது ஊழல் செய்தாரா என்று தெரியாது ஆனால் கல்வி துறை அமைச்சராக நன்றாக செயல்பட்டார்.
Rate this:
K.Muthuraj - Sivakasi,இந்தியா
27-ஜன-202318:42:08 IST Report Abuse
K.Muthurajஉண்மையே. தமிழக கல்வித்துறையில் NCERTஒப்பான பாட திட்டம் 97 சதவீதம் வரை இப்பொழுது உள்ளதற்கு அவரே முழு காரணம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X