''மனு தாக்கல் வரைக்கும் தாக்கு பிடிப்பாரான்னு பேசிட்டு இருக்காங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தார் அன்வர்பாய்.
''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரமா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஆமாம்... அந்தத் தொகுதியில, தி.மு.க., - அ.தி.மு.க., அணிக்கு நடுவுல, 'நானும் ரவுடி தான்' கணக்கா, தே.மு.தி.க., வேட்பாளர் ஆனந்த் களம் இறங்கியிருக்காரே... இவர் வர்ற, 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் பண்ண இருக்காரு பா...

''இதுக்கு இடையில, இவரை ஆளுங்கட்சிக்கு இழுக்க, ரகசிய பேச்சு நடந்துட்டு இருக்காம்... காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரிச்சு, முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் பிரசாரம் செய்ய இருக்காரு பா...
''அந்த பிரசார மேடையிலயே, தே.மு.தி.க., வேட்பாளரை, தி.மு.க.,வுல சேர்க்க, அமைச்சர் ஒருத்தர் வாயிலா ரகசிய பேச்சு நடந்துட்டு இருக்குது... ஒருவேளை அப்படி நடந்தா, தே.மு.தி.க., மாற்று வேட்பாளரை தேடணும் பா...'' என்றார், அன்வர்பாய்.
Advertisement