வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுக்கோட்டை: விராலிமலை அருகே, பொருவாய் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், ஹிந்து முறைப்படி கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பொருவாய் பகுதியைச் சேர்ந்தவர் காத்தமுத்து, 30; பொறியியல் பட்டதாரியான இவர் ஹாங்காங் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அங்கு பணியாற்றிய அதே நாட்டைச் சேர்ந்த செல்சி, 28, என்பவருடன் காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக காதலித்த நிலையில், இருவரின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு குடும்பமும் ஒன்றிணைந்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
நேற்று, புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், காத்தமுத்துவுக்கும், செல்சிக்கும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பின், தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.