அட்டாரி : இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையினரால், குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
நாட்டின் குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நம் அண்டை நாடு பாகிஸ்தானுடனான எல்லையான, பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள எல்லை சோதனை சாவடியில், நேற்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வாகா எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் 'ரேஞ்சர்ஸ்' பிரிவினருக்கு, நம் வீரர்கள் இனிப்புகளை வழங்கினர்.