ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்: இந்திய தூதரகம் கடும் கண்டனம்

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அங்குள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களில், மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றை சூறையாடியதுடன், கோவில் சுவரில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும்
vandalism,Hindu temples,Australia,India,strongly condemns,MEA

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அங்குள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களில், மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றை சூறையாடியதுடன், கோவில் சுவரில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டன.

முதல் தாக்குதல், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடந்தது. இதைத் தொடர்ந்து விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவில், மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோவிலிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


latest tamil news


இது குறித்து கான்பராவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பினர், வெளியில் இருந்து வந்த உத்தரவுகளின்படி இந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியுள்ளனர். இது மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. பல மொழி, மத நம்பிக்கை, கலாசாரங்களை உடையவர்களாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர்.

இதுதான் இந்தியாவின் அடிப்படை பாரம்பரியமாகும். இதை சீர்குலைக்கும் வகையில் நடந்துஉள்ள தாக்குதல்கள் தொடராமல் இருக்க, ஆஸ்திரேலியா அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தாக்குதல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
27-ஜன-202313:35:16 IST Report Abuse
Yes your honor ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் குவாட் கூட்டமைப்பின் வாயிலாகவும் இயற்கையாகவே கூட்டிணைந்த நாடுகளாக இருப்பதால், இந்தியாவின் எதிரிகள் நம் நட்பு நாடுகளில் இதுபோன்ற செயல்களை செய்வதன் மூலம், நட்பு நாடுகளின் மக்களின் மனத்தில் எதிர்மறை எண்ணங்களை விதைக்க உணர்வுபூர்வ தாக்குதல்களைச் செயல்படுத்துகின்றனர். நாம் அனைவரும் இம்மாதிரியான இன்டைரக்ட் தாக்குதல்களை சரியாக புரிந்து கொண்டு நட்பு நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
27-ஜன-202312:23:12 IST Report Abuse
தமிழ்வேள் சர்தார்ஜி கும்பல் சுயசிந்தனை அற்றது என்பது உண்மையே .....இவர்களை பல்லாண்டு காலமாக , இந்திய விடுதலைக்கு பின்பும் , வன்கொடுமைகள் செய்து , பெண்களை கொடூரமாக நடத்தியது பாகிஸ்தானிய முஸ்லிம்கள் ...சீக்கியர்களின் முதல் எதிரியே இஸ்லாமியர்கள் தான் ...குரு கோவிந்த சிங் , குரு தேஜ் பகதூரை இஸ்லாமியர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து விட்டு , இன்று , அவர்களின் சொல்லக்கேட்டு ஆடும் , இதுகளை மூளையற்றதுகள் என்றே சொல்ல இயலும் ....பூர்விக .வரலாற்றை மறந்த ஒரு பரிதாபத்துக்குரிய இனம் ...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஜன-202312:10:42 IST Report Abuse
மலரின் மகள் இந்திய ஆஸ்திரேலிய உறவு என்பது சிறப்பாகவே இருக்கிறது அது தொடரவும் செய்கிறது. அதை சீர்குலைக்க பல வருடங்களாக மேற்கத்திய இரண்டு பெரிய தேசங்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒரு தேசம் நம்முடன் உறவாகவே சென்று கொண்டு பின்னணியில் நம்மை வலிக்கு கொண்டுவர அவர்களின் உலகளாவிய விறுபத்திற்கு நம்மை அழுத்தம் கொடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐதராபாத் மாணவர்கள் மீது இனவெறி என்று பெரியளவில் மீடியாக்கள் மூலம் பரப்பினார்கள். ஓர் தேசத்தில் நடக்கும் சில தனிப்பட்ட முறையிலான சிக்கல்களுக்கு அந்த தேசம் நடவடிக்கைகளை எடுக்கும். அதை அது செய்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்தியர்களுக்கு எதிராக இந்தியாவின் நம்பிக்கைக்கு எதிராக எதாவது எங்காவது நடந்துவிட்டால் அதை மிகவும் பெரிதாக்கி நமக்கு அந்த தேசத்திற்கும் இடையே வெறுப்பை கொணரவேண்டும் என்று முயற்சிக்கிறது. தாங்க எதுவும் நடவாத பட்சத்தில் சதி செய்து இது போன்று ஏதாவது செய்து விட்டு இரண்டு தேசத்திற்கும் இடையில் குழப்பம் ஏற்படுத்துவது என்பது அந்த பெரிய தேசத்தின் வாடிக்கை. அதுபோல இப்போதும் இருக்கும் என்கிறார்கள். பாகிஸ்தானில் நமக்கு எதிராக செயல்பட்டது, உலகளவில் நம்மை முடக்க முயற்சி செய்து கொண்டே வந்தது என்று பலவிசங்கள் இருக்கின்றனவாம். மீடியாக்கள் என்று தங்கள் கையகப்படுத்தி கொண்டு அரசியல் காரணங்களுக்காக மிக பெரியளவில் போலியான செய்திகளை பரப்புவது அல்லது சிறிய செய்திகளை மிக மிக பெரிதாக்கி பிரிச்னைகளை ஏற்படுத்துவது என்பது அவர்களுக்கு வாடிக்கை என்கிறார்கள். என்றோ இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சில விஷயங்களின் மீதும் தேவையில்லாமல் கற்பனை கலந்த கதைகளை புனைந்த நாவல் போன்றதை டாக்குமெண்டரி படங்களாக எடுத்தும் நமக்கு எதிராக அவர்கள் செயல்படுவார்களாம். இன்றைய நமது இந்திய உலகம் படித்தவர்களை பெரும்பாலும் தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது நமது பாரதம். எது சரி என்று தெரியும் அனைவருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X