வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : 'பண மோசடி தொடர்பான குற்றங்கள் குறித்து மட்டுமே அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியும். அந்தப் பண மோசடியால் மற்றொரு குற்றம் நடந்தது தொடர்பாக விசாரிக்க அதற்கு அதிகாரமில்லை' என, புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், பண மோசடி நடந்துள்ளதா என்பது தொடர்பாக மட்டுமே அமலாக்கத் துறை விசாரிக்க முடியும். அந்தப் பண மோசடியால் கிடைத்துள்ள வருவாயில் நடந்துள்ள மோசடிகள், குற்றங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்க முடியாது. அது தொடர்பாக உரிய சட்டங்களின் கீழ், உரிய அமைப்புகள் மட்டுமே விசாரிக்க முடியும்.
![]()
|
பண மோசடி தொடர்பான விசாரணையின்போது, மற்றொரு குற்றம் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் அமலாக்கத் துறைக்கு கிடைத்தாலும், அதன் மீது அந்த அமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அந்த ஆதாரங்களை, உரிய அமைப்புகளிடம் அமலாக்கத் துறை ஒப்படைக்க வேண்டும். அந்த உரிய அமைப்புகளே அந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.