வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பல்லடம்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, 'தமிழக' முதல்வர் என்றிருந்த சுவர் வாசகத்தை அறிந்த பல்லடம் தி.மு.க.,வினர், 'தமிழ்நாடு' முதலமைச்சர் என, மாற்றினர்.
கவர்னர் ரவி, 'தமிழ்நாடு' என்ற பெயருக்கு பதில், 'தமிழகம்' என்பதே சரியாக இருக்கும் என்று கூறிய கருத்துக்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மார்ச், 1ம் தேதி பிறந்த நாள் கொண்டாடவுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
அதில், 'தமிழக முதல்வர்' என எழுதியிருந்தனர். 'தமிழகம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வினரே, அதை பயன்படுத்தியது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
![]()
|