சென்னை: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வரும், 30ம் தேதி, 'டாஸ்மாக்' மது கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மது கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மே தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை.
அதன்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இம்மாதம், 16ம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்றும் மது கடைகள் செயல்படவில்லை.
![]()
|
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement