சிறுபாக்கம்-சிறுபாக்கம் கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சிறுபாக்கம் - எஸ்.புதூர் சாலையில் காட்டுகொட்டாய் பகுதியில் புதியதாக கற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அதில், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்க்கை அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சன்னதிகளும் அமைக்கப்பட்டது.
மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை, மகா சங்கல்பம் மற்றும் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல்கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை, ருத்ர வேத பாராயணம், பூஜைகள் நடந்தது.
காலை 9:00 மணியளவில் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.