பறவை மனிதருக்கு கவர்னர் கவுரவம்

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: 'பறவை மனிதர்' என்று அழைக்கப்படும் கூந்தன்குளம் பால்பாண்டி, கவர்னரின் விருந்தினராக கவுரவிக்கப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆர்வலராக அறிமுகமாகி, வேட்டை தடுப்பு காவலராக மாறியவர் பால்பாண்டி, 67. பறவைகள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஈர்க்கப்பட்டு, கூந்தன்குளம் சரணாலயத்தில் பணியில் சேர்ந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக,
Governor Ravi,Bird Man, Palpandi, கவர்னர் ரவி, பறவை மனிதர், சென்னை, கூந்தன்குளம் பால்பாண்டி, பறவைகள் சரணாலயம், Chennai, Koondhankulam Palpandi, Bird Sanctuary,

சென்னை: 'பறவை மனிதர்' என்று அழைக்கப்படும் கூந்தன்குளம் பால்பாண்டி, கவர்னரின் விருந்தினராக கவுரவிக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆர்வலராக அறிமுகமாகி, வேட்டை தடுப்பு காவலராக மாறியவர் பால்பாண்டி, 67. பறவைகள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஈர்க்கப்பட்டு, கூந்தன்குளம் சரணாலயத்தில் பணியில் சேர்ந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கூந்தன்குளம் பறவைகள் சரணாலய பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கூந்தன்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில், பறவைகளின் வருகையை அதிகரிக்க, 1,600க்கு மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். வலசை வரும்போது பாதிக்கப்பட்ட 4,000 பறவைகளை மீட்டு, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, 74 விருதுகளை பெற்றுள்ள இவரை மையப்படுத்தி, 17 ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரை, குடியரசு தின தேனீர் விருந்துக்கு அழைத்து, கவர்னர் ரவி கவுரவப்படுத்தி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
28-ஜன-202317:38:16 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நல்ல ஆன்மா பூமியில் கடமையாற்றுகிறது
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
27-ஜன-202311:24:00 IST Report Abuse
JeevaKiran நல்ல முயற்சி. நல்ல தொடக்கம். இதேபோல் பாமரமக்களுக்கு தொடரட்டும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஜன-202309:29:41 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் ஏன் எந்த திராவிட நாதாரிகள் கண்களிலும் படுவதே இல்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X