வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: 'பெயரளவுக்கு சமூக நீதி பேசி, நடைமுறையில் அதை காற்றில் பறக்கவிடும் தி.மு.க.,வின் பகல் வேஷம், தொடர்ந்து கலைந்து வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அதிகார போதையில், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய தி.மு.க., ஆட்சியில், பட்டியலின ஊராட்சி தலைவர்களான சகோதர, சகோதரிகளை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுக்கும் அவலம் அடிக்கடி நடக்கிறது. அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் திருப்புக்குழி ஊராட்சி தலைவர் சுகுணா தேவேந்திரனை, தி.மு.க., நிர்வாகி ஒருவர் துாண்டுதலில், குடியரசு தினத்திற்கு தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரையும் கொடியேற்ற விடாமல் தடுத்து, தமிழக பா.ஜ., தலையிட்டதால் கொடியேற்ற அனுமதித்தனர்.
![]()
|
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு எதிரான சம்பவத்தில், தி.மு.க., அரசு, குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல், வேடிக்கை பார்த்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க, இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
தொடரும் பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களை, கண்டும் காணாமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலினின் மவுனம், அவலத்தின் உச்சம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement