மதுரை -மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் தேசியக்கொடி ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தியாகிகளை கவுரவித்தார். பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய 250 அரசு ஊழியர்களுக்கும், இன்ஸ்பெக்டர்கள் எஸ்தர், வசந்தா, ரமேஷ்குமார், சிவபான், பால்ராஜ், புகைப்பட நிபுணர் ஆறுமுகம், எஸ்.ஐ., ரமேஷ், ஏட்டு செந்தில் உட்பட 217 போலீசாருக்கும் சான்றிதழ் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, உடற்கல்வி ஆய்வாளர்கள் செங்கதிர், வினோத் ஏற்பாடுகளை செய்தனர். தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க், கமிஷனர் நரேந்திர நாயர், டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., சிவபிரசாத், டி. ஆர்.ஓ., சக்திவேல் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓ., சாலி தளபதி ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர் சண்முக திருக்குமரன் தொகுத்து வழங்கினார்.
பள்ளி, கல்லுாரி
மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி விழாவில் முதல்வர் சூர்யபிரபா கொடியேற்றினார். மாணவர்களுக்கு கொடியின் மூவர்ணத்தை அடிப்படையாக கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தேசத்தலைவர்கள் வேடமிட்ட மாணவர்கள் உற்சாக ஆடை அணிவகுப்பு நடத்தினர். மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி விழாவில் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி கொடி ஏற்றினார். தொடர்ந்து, 'ஒற்றுமையே நம்மை பலப்படுத்தும் ஆயுதம்' என்று பேசினார். முதல்வர் சுஜாதா தேசப்பற்றின் முக்கியத்துவத்தை விளக்கினார். துணை முதல்வர் அர்ச்சுனன், டீன் பிரியா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் பாண்டியராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஜெயரூபா கொடி ஏற்றினார். நிர்வாகி ஜெயவீர பாண்டியன் தலைமை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி, ஆசிரியர்களின் பட்டி மன்றம் நடந்தது.
பாத்திமா மைக்கேல் பொறியியல் கல்லுாரியில் முதல்வர் நெல்சன்ராஜா கொடியேற்றினார். கல்வி குழுமத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் பிரிட்ஜெட் நிர்மலா முன்னிலை வகித்தார். களிமங்கலம் ஊராட்சி தலைவர் ரம்மிஸ் பாத்திமா, சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் பாராட்டப்பட்டார். பேராசிரியர் ஆதிமூலம் நன்றி கூறினார்.
மதுரை தெற்குவாசல் நாடார் வித்யாசாலை நடுநிலை பள்ளி, மேல்நிலை பள்ளி, காமராஜர் நர்சரி பள்ளி சார்பில் நடந்த விழாவில் அசோக்குமார் அரிசி ஆலை மற்றும் சந்திரா தேவி ைஹடெக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் அன்பரசன், காமராஜர் அறப்பணிக்குழு தலைவர் உத்தண்டன் கொடியேற்றினர். பள்ளி தலைவர் பார்த்திபன், உறவின்முறை தலைவர் கணபதி, துணைச் செயலாளர் அருஞ்சுனைராஜன், பள்ளி செயலாளர் குணசேகரன், வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் நாகநாதன், நடுநிலை பள்ளி தலைமையாசிரியை காந்திபாய் சிவனடியாள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி நடந்தது.
மதுரை பசுமலை சி.எஸ்.ஐ.,ஜெயராஜ் அன்னபாக்கியம் நர்சிங் கல்லுாரியில் நிர்வாகி யாக்கோபு கொடியேற்றினார். முதல்வர் ஜோதி சோபியா, துணை முதல்வர் மெர்லின் ஜெயபால் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
எல்.கே.பி. நகர் நடுநிலைப்பள்ளி விழாவில் ஊராட்சி தலைவர் நாகலட்சுமி தலைமையில் தலைமையாசிரியர் தென்னவன் கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை சித்ரா தொகுத்து வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நுார்முகமது, ஊராட்சி துணைத் தலைவர் முருகேஸ்வரி, ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ராஜவடிவேல், அருவகம், அனுசுயா, மனோன்மணி, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா பங்கேற்றனர்.
கீரைத்துரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செயலர் சிவக்குமார் தலைமையில் தலைவர் பிச்சைப்பாண்டியன் கொடி ஏற்றினார். தலைமையாசிரியை சரஸ்வதி முன்னிலையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.
மதுரை வேளாண் கல்லுாரி விழாவில் முதல்வர் மகேந்திரன் கொடியேற்றினார். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். சமுதாய அறிவியல் கல்லுாரி முதல்வர் காஞ்சனா தேச ஒற்றுமை குறித்து பேசினார். கலைநிகழ்ச்சி நடந்தது. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள் சாலிகா, சாந்தி, என்.சி.சி., ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், உடற்கல்வி இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டனர்.
மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி விழாவில் முதல்வர் ஈஸ்டர் ஜோதி கொடியேற்றினார். ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார். ஆசிரியை சுப்புலட்சுமி குடியரசு தினம் குறித்தும் ஆசிரியை பசுபதி அரசியல் அமைப்பு சட்டம் குறித்தும் பேசினர். ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.
அ.வள்ளாளபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் வாசிமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், ஆசிரியர்கள் சங்கரலிங்கம், சுரேஷ், இசக்கிபாண்டி, சேதுபதிராஜா பங்கேற்றனர்.
லேடிடோக் கல்லுாரியில் இணைப்பேராசிரியர்கள் சித்ரா, மேரி வினோரா மெர்சி கொடியேற்றினர். சிற்றாலயப் பொறுப்பாளர் ஜெஸி ரஞ்சிதா, துணைமுதல்வர் பியூலா ஜெயஸ்ரீ கலந்து கொண்டனர். மாணவ பேரவை முதுகலை தலைவி திவ்யா நன்றி கூறினார். ஆசிரியர்கள் ஜெமிமா ஜெயபிரியா, எஸ்தர் எலிசபெத் கிரேஸ், சுஜாதா, பூங்கொடி ஒருங்கிணைத்தனர்.
வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி விழாவில் செயற்குழு உறுப்பினர் சரவணபாலன் கொடியேற்றினார். செயலாளர் சுந்தர், பொருளாளர் நல்லதம்பி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார், துணைமுதல்வர் செல்வமலர், டீன் ஸ்ரீதர் கலந்து கொண்டனர். என்.சி.சி., சார்பில் நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியின் குழு பிரிவில் முதலிடம் பெற்ற மாணவர் இந்திரனுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரி விழாவில் செயலாளர் ராதாகிருஷ்ணன் குடியரசு தினவிழா முக்கியத்துவத்தை விளக்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் மனெக்சா பாபு, முரளிதரன் ஓட்டுரிமை குறித்து பேசினர். முதல்வர் ஆனந்தன், துணைமுதல்வர் சகாதேவன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இடையபட்டி கேந்திரிய வித்யாலயா ஐ.டி.பி.பி., பள்ளியில் முதல்வர் பானுமதி கொடியேற்றினார். ஆசிரியர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரியர் வீனஸ் குடியரசு தினவிழா குறித்து பேசினார். கலைநிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகள் விழாவை தாளாளர் செந்தில்ரமேஷ் துவக்கி வைத்தார். மாணவர் ரித்திக் கண்ணா வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் சத்தியமூர்த்தி கொடியேற்றினார். முதல்வர்கள் சீதாலட்சுமி, சபுரால் பானு இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் சமிஹா மீரா நன்றி கூறினார்.
கொடிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி விழாவில் ஊராட்சி தலைவி உமாதேவி கொடியேற்றினார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சுந்தரராஜன், உறுப்பினர் விஜயா கலந்து கொண்டனர். ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.
சம்மட்டிபுரம் பிள்ளைமார் சங்க மேல்நிலைப் பள்ளி விழாவில் நிர்வாகக்குழுத் தலைவர் சண்முகவேல் கொடியேற்றினார். செயலர் முருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார். நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பொன்னுத்துரை, பழனி கலந்து கொண்டனர். ஆசிரியை ரம்யாலட்சுமி நன்றி கூறினார்.
ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி விழாவில் தலைவர் தர்மராஜ் கொடியேற்றினார். துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தாளாளர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார். துணைச்செயலர் பாஸ்கரன், விடுதிக்குழு செயலர் குமார் கலந்து கொண்டனர். மாநில சிலம்பப்போட்டியில் தங்கம் வென்ற மாணவர் வெங்கடேஷ் கவுரவிக்கப்பட்டார். தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
அவனியாபுரம் எஸ்.பி.ஜெ., மெட்ரிக் பள்ளி விழாவில் டாக்டர் வினோத்குமார் கொடியேற்றினார். டாக்டர் திவ்யா விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். முதல்வர் அபர்ணா தலைமை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிச் செயலாளர் பழனிசாமி பரிசு வழங்கினார்.
கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளி விழாவில் மதுரை காமராஜ் பல்கலை வேதியியல் புலத்துறைத் துறை பேராசிரியர் வசந்தா கொடியேற்றினார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சி நடந்தது.
நாகமலை விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியகம் பள்ளி விழாவில் முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவத்தை உருவாக்கினர். விஜயலட்சுமி, புரவலர், இணைப்புரவலர், நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பாரப்பத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சின்னத்துரை கொடியேற்றினார். ஊராட்சி தலைவர் முத்தையா, திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் வேட்டையன், கிராம நாட்டாமை வரதராஜன், நிர்வாகிகள் செல்வி, பாக்கியராஜ், மணி, மொக்கசாமி, மலைச்சாமி, பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை காமராஜ் பல்கலை விழாவில் துணைவேந்தர் குமார் கொடியேற்றினார். பேராசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்கரைமுத்துப்பிள்ளை கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இரண்டு மின்விசிறிகளை நன்கொடையாக வழங்கினர். அங்கயற்கண்ணி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, நாகேஸ்வரி, ரமேஷ்கண்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.
ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி விழா போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவி பூங்கோதை, ரோட்டரி கிளப் தலைவர் அமர் ஓரா, முகமது இப்ராஹிம், ரோட்டரி கிளப் உறுப்பினர் செல்வகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் திவ்யநாதன், உதவி தலைமையாசிரியர் ராணி, ஆசிரியர்கள் கண்ணன், ராஜமனோகரன் ஏற்பாடுகளை செய்தனர்.
ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமையில் தலைமையாசிரியை ஜீவா கொடியேற்றினார். ஆசிரியை ஹேமமாலினி வரவேற்றார். கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் மோசஸ் நன்றி கூறினார்.
எஸ்.எஸ்.காலனி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியை ஜெயஸ்ரீ கொடியேற்றினார். கவுன்சிலர் செல்வி, நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் கர்ணன் கலந்து கொண்டனர்.
ஏ.பி.வி.பி., சார்பாக ஜெய்ஹிந்துபுரம் ஸ்ரீ வாணி பள்ளியில் கொடியேற்றப்பட்டு மாணவர்களுக்கு தேசிய கொடி, இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட நுகர்வோர் பொருட்கள் சங்கத் தலைவர் மாதவன், தாளாளர் செல்வராஜ், முதல்வர் செல்வகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராஜ் , மாநில பொறுப்பாளர் மோகன் கலந்து கொண்டனர். தொடர்ந்து நகர் அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது. தலைவர் எழில் பரமகுரு, மாநில அலுவலக இணை செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.
அரசு அலுவலகங்கள் அமைப்புகள்
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கொடியேற்றினார். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் (சி.ஐ.எஸ்.எப்.,) அணிவிப்பு மரியாதை நடந்தது. ரத்ததான முகாம், கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு நடந்தது.
சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் சார்பில் உத்தங்குடி ரோஜாவனம் முதியோர் இல்லத்திற்கு ரூ.65 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு, வேட்டிகள், குடிநீர் தொட்டி உட்பட நல உதவிகளை துணை கமாண்டன்ட் வெங்கடேஸ்வரராவ், உதவி கமாண்டன்ட் நாகரா வழங்கினர்.
மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி வடமலை கொடியேற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் டீன் ரத்தினவேல் கொடியேற்றினார். மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் தனலட்சுமி, ஆர்.எம்.ஓ.,க்கள் ரவீந்திரன், ஸ்ரீலதா, டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் முதன்மை டாக்டர் வைரவசாமி கொடியேற்றினார். உதவி டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை வடக்கு எஸ்.டி.பி.ஐ., தலைமையகத்தில் மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் மாநில தலைவர் நெல்லை முபாரக் கொடியேற்றினார். துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். மண்டல தலைவர் அபுபக்கர் சித்திக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாவட்ட துணைத்தலைவர் ஜாபர் சுல்தான், செயலாளர் கமால் பாட்ஷா, வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் பகுருதீன், பொருளாளர் ரகுமான் பங்கேற்றனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஊமச்சிகுளம் கிளை விழாவில் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் வெங்கடாஜலபதி தலைமையில் கிளை பொதுச் செயலாளர் வித்யா கொடி ஏற்றினார். கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தாம்பிராஸ் ஜெய்ஹிந்திபுரம் கிளை சார்பாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாகி ராஜம் மீனாட்சி, முதன்மை ஆலோசகர் ஸ்ரீனிவாசன், ஆலோசகர்கள் வெங்கட்ராமன், கல்யாணி, செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், உமா, சித்ரா, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, ரங்கராஜன் கலந்துகொண்டனர்.
மதுரை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சூரியகலா கொடியேற்றினார். துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட கவுன்சிலர்கள் வடிவேல் முருகன், காசிமாயன், சித்ராதேவி, ராஜி, ஜெயலட்சுமி பங்கேற்றனர்.
முனிச்சாலை சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக மாநில இளைஞரணி செயலாளர் கருப்பசாமி கொடியேற்றினார். தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார். கவுன்சிலர் சையது அபுதாகீர் இனிப்பு வழங்கினார். செயலாளர் கதிரேசன், பொருளாளர் ஜெயபாண்டியன், நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
நகர் காங்., சார்பாக தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள், செய்யதுபாபு, துரையரசன், பால் ஜோசப், கவுன்சிலர் முருகன், மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், துணைத் தலைவர்கள் பாலு, மகேஸ்வரன், சோனியாபாய், ராஜ் பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் காமராஜ், மகிளா காங்., தலைவி ஷானவாஸ் பேகம் கலந்து கொண்டனர்.
கார்கில் யுத்தத்தில் கலந்து கொண்ட ராணுவ சுபேதார் டாசி, மதுரையில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செய்தார். ஜே.சி.ஐ. அமைப்பின் பட்டய தலைவர் ரத்தீஷ் பாபு கொடியேற்றினார். தேசிய வலிமை சுவாமிநாதன் ஒருங்கிணைத்தார். லயன்ஸ் உறுப்பினர் சேகர், மாரிமுத்து, மணிவண்ணன் கலந்து கொண்டனர்.
மதுரை எஸ்.டி.பி.ஐ., தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் உமர்பாரூக் கொடியேற்றினார். மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நலஉதவி வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்றார். கவுன்சிலர் அபுதாஹிர், மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயலாளர் சம்சு அப்துல்லா நன்றி கூறினார்.
கோமதிபுரம் தென்றல்நகர் குடியிருப்போர் சங்க விழாவில் தலைவர் ராகவன் கொடியேற்றினார். செயலாளர் பன்னீர்செல்வன், வழக்கறிஞர் சேதுபதி பேசினர். பிரின்ஸ் மழலையர் பள்ளி மாணவர்களின் யோகா, கலைநிகழ்ச்சி நடந்தது. ஆலோசகர் கருணையானந்தன் தொகுத்து வழங்கினார்.
சவுராஷ்டிரா கூட்டுறவு வங்கி சார்பாக வங்கித்தலைவர் சாரதி கொடியேற்றினார். துணைத்தலைவர் சந்திரபிரகாஷ், நிர்வாகக்குழு உறுப்பினர் ஹீராசந்த் பாபு, பொது மேலாளர் கண்ணன், உதவி மேலாளர் ஹரிஹரன், சீதாராம ஆஞ்சநேயர் கோயில் பொருளாளர் ஜீவன்பாபு, வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில் தலைவர் வேல்சங்கர் கொடியேற்றினார். கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் நன்றி கூறினார். வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நிறுவனர் ரத்தினவேல் கொடியேற்றினார்.
வேளாண் உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், பதனீட்டுத்தொழில் செய்வோர், வணிகர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் தலைவர் மோகன்ராம் கொடியேற்றினார். தீயணைப்பு அதிகாரி ரவீந்திரன் பங்கேற்றார். செயற்குழு உறுப்பினர் ரூபேஷ்பாபு ஏற்பாடுகளை செய்திருந்தார். பொதுச்செயலாளர் குபேந்திரன் நன்றி கூறினார். முன்னாள் தலைவர்கள் ரமேஷ், பிரபாகரன், குமரேசன், குமரன், பொதுச்செயலர் குபேந்திரன், இணைச்செயலாளர் ராலட்சுமணன், சரவணன், பொருளாளர் குமரேஷ்பாபு கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் தலைவர் ஜெகதீசன் கொடியேற்றினார். செயலாளர் செல்வம், சங்க நிர்வாகிகள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மதுரை சம்மட்டிபுரம் மெயின்ரோடு காந்திஜி சமூக நல அறக்கட்டளை சார்பில் தலைவர் ஜெயராமன் கொடியேற்றினார்.
கடல் தாமரை
தேனுாரில் விவசாய சங்க தலைவர் செல்லம், முன்னாள் ஊராட்சி தலைவர் மாயாண்டி முன்னிலையில் கொடி ஏற்றினார். கணேஷ் ராமச்சந்திரன், நேரு மகேந்திரா தேசியத் தொண்டர் பாண்டீஸ்வரி, சுழியம் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கார்த்திகை குமரன் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக சமயநல்லுார் எஸ்.ஐ., தியாகராஜன் கலந்து கொண்டார். பங்கேற்றவர்களுக்கு பேராசிரியர் அழகர்சாமி தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாறு குறித்த கடல் தாமரை புத்தகத்தை வழங்கினார். ஏற்பாடுகளை சுழியம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
டி.வி.நல்லுார் ஊராட்சியில் தலைவர் சகுபர் சாதிக், துணைத்தலைவர் மாலிக், பற்றாளர் சாந்தி, செயலர் வேலவன், சி.புதுாரில் ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன், துணைத்தலைவர் விசாலாட்சி, பற்றாளர் கோவிந்தம்மாள், செயலர் காசி, நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் இஞ்சி, பற்றாளர் ரங்கநாதன், செயலர் ரேவதி பங்கேற்றனர். ரிஷபம் ஊராட்சியில் தலைவர் சிறுமணி, துணைத்தலைவர் சிவசாமி, பற்றாளர் திவ்யா ஜெனிபர், செயலர் முத்துவேலம்மாள். இரும்பாடி ஊராட்சி தலைவர் ஈஸ்வரி, துணைத்தலைவர் பிரியா, பற்றாளர் நாகஜோதி, செயலர் காசிலிங்கம் பங்கேற்றனர்.
செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் தலைவர் பூங்கொடி, பி.டி.ஓ., பிரேமா, துணைத்தலைவர் செல்வராணி, பற்றாளர் பாலகிருஷ்ணன், செயலர் பாண்டி, பிரதமரின் கனவு திட்டமான நீர்நிலை உருவாக்கம் இடங்களிலும் தலைவர் பூங்கொடி கொடியேற்றினார். விக்கிரமங்கலம் ஊராட்சி தலைவர் கலியுகநாதன், துணைத்தலைவர் செல்வி, பற்றாளர் பிரதாப், செயலர் பால்பாண்டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தீபா தலைமையில் கொடியேற்றி கலைநிகழ்ச்சி நடந்தது. மேலாண்மைக் குழுத் தலைவர் தமிழ் இலக்கியா, துணைத்தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகானந்தம், சேர்மன் ஜெயராமன், உறுப்பினர் சத்தியபிரகாஷ், முத்துச்செல்வி, செந்தில், ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் விமலா தேவி கொடியேற்றினார். தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வி, கவுன்சிலர் கார்த்திகா பங்கேற்றனர்.
திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் செயலர் வேதானந்த கொடியேற்றினார். தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன், முதல்வர் வெங்கடேசன், குலபதி அத்யமானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, தேர்வு கட்டுப்பாட்டாளர் சஞ்சீவி, என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் அசோக்குமார், ரமேஷ்குமார், ரகு, ராஜ்குமார், தினகரன், ஆனந்தன் பங்கேற்றனர்.
சோழவந்தான் காங்., பேரூர் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் சிறுபான்மை பிரிவு பாதுஷா முன்னிலையில் கொடியேற்றி, இனிப்பு வழங்கினர்.
உசிலம்பட்டி
ரங்கசாமிபட்டியில் ஊராட்சி துணைத்தலைவர் பெருமாள்ராணி முன்னிலையில் தலைமை ஆசிரியர் விஜயா, மலைப்பட்டியில் தலைமை ஆசிரியர் ராஜாங்கம், வாசிநகரில் தலைமை தலைமை ஆசிரியர் மாலதி, குன்னுாத்துப்பட்டியில் தலைமை ஆசிரியர் பத்மஸ்ரீ, குருவிளாம்பட்டியில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி முன்னிலையில் வட்டாரக்கல்வி அலுவலர் சுப்புராஜ், பெரிய செம்மேட்டுப்பட்டியில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, நடுப்பட்டியில் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி கொடியேற்றினர்.
மகாலிங்கபுரத்தில் தலைமை ஆசிரியர் மோகனா, பெருமாள் கோயில்பட்டியில் தலைமை ஆசிரியர் சண்முகவள்ளி, முத்தையன்பட்டியில் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், குஞ்சாம்பட்டியில் தலைமை ஆசிரியர் அருள்மொழி, ஒத்தப்பட்டியில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, கட்டளைமாயன்பட்டியில் தலைமை ஆசிரியர் பொற்செல்வன், லிங்கநாயக்கன்பட்டியில் தலைமை ஆசிரியர் மலர்கொடி, கீழப்புதுார் டி.இ.எல்.சி., பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக்னஸ், பூச்சிபட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரியமாலா, உத்தப்பநாயக்கனுார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி, பாறைப்பட்டியில் தலைமை ஆசிரியர் செல்வம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன்பிரபு கொடி ஏற்றினர். எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஆறுமுகசுந்தரி முன்னிலையில் தாளாளர் பொன்கருணாநிதி, தர்மவித்யாபவனில் தலைமை ஆசிரியர் மேகலா முன்னிலையில் தாளாளர் பொன்கருணாநிதி, ஹரிஜன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி முன்னிலையில் நிர்வாகி வரதராஜன், சின்னக்கட்டளை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் லட்சுமி முன்னிலையில் நிர்வாகி பொன்திருமலைராஜன் கொடி ஏற்றினர்.
மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரி நிர்வாகி பெருமாள் தலைமையில் நிர்வாகி ராமராஜ், மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நிர்வாகி சென்னகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகி சுப்பிரமணி, பாலிடெக்னிக் கல்லுாரியில் நிர்வாகி செல்வராஜ் தலைமையில் நிர்வாகி ராமகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளியில் நிர்வாக அலுவலர் சந்திரன் தலைமையில் நிர்வாகி லோகநாதன் கொடி ஏற்றினர். விஸ்வ வித்யாலயா பள்ளியில் முதல்வர், ஆசிரியர்கள் நிர்வாகிகள் முன்னிலையில் தாளாளர் பாண்டியன் கொடி ஏற்றினார்.