''இலவச குடிநீர் இயந்திரங்களை வழங்க இருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்து குடிநீர் தொட்டியில, மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துச்சே...
''மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், தன் கட்சியின் மாநில நிர்வாகிகளை உண்மை கண்டறியும்குழுவா, அங்க அனுப்பி வச்சாருங்க...
''அந்தக் குழுவினரும், கிராம மக்களிடம் விசாரணை நடத்தி, அதுல கிடைச்ச தகவல்கள் அடிப்படையில, சில கோரிக்கைகளை மனுவா எழுதி, கலெக்டர் கவிதா ராமுவிடம் குடுத்திருக்காங்க...
![]()
|
''அதோட, பாதிக்கப்பட்ட வேங்கை வயல் கிராம மக்களுக்கு, காற்றுல இருந்து குடிநீர் தயாரித்து வழங்கும் இயந்திரங்களை இலவசமா வழங்கவும் முடிவு பண்ணி, அதுக்கான அனுமதியையும் கலெக்டரிடம் கேட்டிருக்காங்க...
''அனுமதி கிடைச்சதும்,அந்த இயந்திரங்களை கமலே அங்க போய் வழங்க இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.