சென்னை : அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், உண்டியல் திறப்பு நிகழ்வை, பக்தர்கள் கண்டறியும் வகையில், நேரலையாக ஒளிபரப்பு செய்ய, கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டு உள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 48 முதுநிலை கோவில்களின் உண்டியல் திறப்பு, 'எல்காட்' நிறுவனம் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முதுநிலை கோவில்களின் முக்கிய நிகழ்வுகளை, 'யு- டியூப்' வாயிலாக, கோவில் சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
![]()
|
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் வலைதள முகவரியை, பொதுமக்கள் அறியும் வகையில் கோவில் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இதற்கான வசதிகளை, அந்தந்த மண்டல இணைக் கமிஷனர் மேற்கொண்டு, நேரடி ஒளிபரப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.