தெலுங்கானாவில் அனைத்தும் விதிமீறல்: கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 27, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுச்சேரி: மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலுங்கானா அரசு ஈடுபட்டு வருகிறது' என, கவர்னர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று புதுச்சேரி ராஜ்நிவாசில் நிருபர்களிடம் கூறியதாவது:குடியரசு தினவிழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை பாராட்டுகிறேன். தெலுங்கானா முதல்வர் என்னை புறக்கணிப்பது புதிதல்ல. தெலுங்கானா

புதுச்சேரி: மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலுங்கானா அரசு ஈடுபட்டு வருகிறது' என, கவர்னர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.



latest tamil news



இதுகுறித்து அவர் நேற்று புதுச்சேரி ராஜ்நிவாசில் நிருபர்களிடம் கூறியதாவது:
குடியரசு தினவிழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை பாராட்டுகிறேன். தெலுங்கானா முதல்வர் என்னை புறக்கணிப்பது புதிதல்ல. தெலுங்கானா அரசு குடியரசு தினவிழாவை குறைத்து மதிப்பிட்டு, அரசாங்க விழாவாக நடத்தாமல், அரசிடமிருந்து எந்த அறிவிப்பு வராமல், அவர்களும் எங்கும் கொடி ஏற்றாமல் செயல்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்களில் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தெலுங்கானா அரசுக்கு கடுமையான கண்டத்தை தெரிவித்த நீதிமன்றம், குடியரசு தினவிழாவை முழுமையாக நடத்த உத்தரவிட்டது.

ஆனால், நேரம் குறைவாக இருந்ததால் அரசு குடியரசு தின விழாவை நடத்த முடியவில்லை என தெரிவித்துவிட்டது. என்னால் தேசியகொடிக்கு என்ன மரியாதை செய்ய முடியுமோ, அதை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கினேன். கவர்னர் மாளிகையில் குடியரசு தினவிழா நடத்தியதற்கான காரணத்தை தெலுங்கானா முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலுங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஜன-202312:12:39 IST Report Abuse
Sridhar நீங்கள் நடவடிக்கை எடுக்க தயங்கினால், அவர்கள் மேலும் அவ்வாறான செயல்களை செய்துகொண்டுதான் இருப்பார்கள். முதலில் முனகுவதை விடவேண்டும். செயலில் ஆர்வம் காட்டுங்கள். முடிந்தால் கோர்ட் மூலம் டிஸ்மிஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். என்ன செய்கிறீர்களோ இல்லையோ, முனகுவதை நிறுத்துங்கள்.
Rate this:
Cancel
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-202311:14:04 IST Report Abuse
JAGADEESANRAJAMANI தேசவிரோதிகள்தான் குடிஅரசுதினத்தை அவமதிப்பர்.அதை ஒருமாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் குடியரசுதினவிழாவை புறக்கணித்தது வெட்கக்கேடானது.
Rate this:
Cancel
Natarajan Mahalingam - CHENNAI,இந்தியா
27-ஜன-202310:38:01 IST Report Abuse
Natarajan Mahalingam PM MODI அவர்களின் meethana veruppu, naatirkku ethiraga seyalpadugirargal... desa thorgam மற்றும் desa virodham ena thaniaga ellamal, erandum கலந்த maanila arasiyalvaathigal ஆக உள்ளனர். Desa varalariyil karum pulliagakagavey irrupar. Jaihind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X