சென்னை: தமிழகத்தில் நான்கு இடங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, குடியரசு தின விழா நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
சென்னை, அண்ணா சாலையில் தீவுத்திடல் முதல், விமான நிலையம் வரை, இருபுறங்களிலும், 500 மீ., அகலத்திற்கு உயர்த்தப்பட்ட மற்றும் வேறுபட்ட தரப்பரப்பு குறியீடு வழியாக, உயர் அடுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இத்திட்டம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை மேம்படுத்தவும், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உதவும்
சென்னை கடற்கரையில், தற்போதைய அணுக இயலாத பகுதிகளை, மென்மையான உட்கட்டமைப்பு வழியே இணைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது
தீயணைப்புத் துறை சார்பில், கூடுதலாக, 54 மீ., உயரம் செல்லக் கூடிய, மூன்று, 'ஸ்கை லிப்ட்' ஊர்திகள், திருச்சி, திருப்பூர், கோவை மாநகரங்களுக்காக, கொள் முதல் செய்யப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement