சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. அதில், சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் நடந்து சென்ற பத்மபிரியா(22) என்ற மென்பொறியாளர் மீது விழுந்தது.
பலத்த காயமடைந்த அந்த பத்மபிரியா, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, பொக்லைன் உரிமையாளர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் பொக்லைன் ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.