வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம்: காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரூ. 70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் காரை இளம் டாக்டர் ஒருவர் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியை சேர்ந்தவர் கவின்(28). காஞ்சிபுரம் அருகேயுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் உடன் படிக்கும் காவ்யா என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் குளக்கரை அருகே காவ்யாவுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த கவின், தனது 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு(பென்ஸ்) காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். குளக்கரை அருகே கார் எரிவதை பார்த்த, மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தீவிர முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த கார் எரிந்து எலும்பு கூடானது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.