சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று(ஜன.,27) நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 2 அல்லது 3 வினாடிகள் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். வீடு, கடைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன.
கடை ஒன்றில் இருந்த பொருட்கள் அனைத்தும் லேசாக குலுங்கியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. அதேநேரத்தில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நில அதிர்வு உணரப்படவில்லை. மிகச்சிறய அளவில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.