திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ அமைப்பின் சார்பில் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி ,தி.மு.க.,
வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ஜெயன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. 10 டிவிஷன் எடை பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கான போட்டியில் 32 மாவட்ட அணிகள், ஐந்து நடுவர்கள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில்விருதுநகர் மாவட்டம், பெண்கள் பிரிவில் பெரம்பலுார் மாவட்டம் வெற்றி பெற்றது.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் குமார், காந்திராஜன் பரிசுகள் வழங்கினர். டேக்வாண்டோ சங்க மாநில தலைவர் செல்வமணி ஏற்பாடு செய்தார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு நன்றி கூறினார்.