கோவை: குடியரசு தினத்தையொட்டி, கிணத்துக்கடவு ஒன்றியம் அரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரச்சேரியில், கிராமசபைக்கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் சமீரன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று பேசுகையில், ''லோக்சபா, சட்டசபை போன்று, கிராமசபையும் மிக முக்கிய அமைப்பாகும். அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார்.
முன்னதாக, அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தங்களது துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கினர். ஊராட்சி செயலர்கள் கிராமசபை கூட்டப்பொருள் குறித்து விளக்கினர். கலெக்டர் சிறப்பு பார்வையாளராக காரச்சேரி கிராமத்திற்கு சென்று கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றதால், மக்கள் வியப்புடன் அவரைச் சுற்றி சுற்றி வந்து தங்கள் கிராமத்திலுள்ள பிரச்னைகள் குறித்து கூறினர்.