குன்னூர் : குன்னூரில் உள்ள பள்ளியில் இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பென்சில் கத்தி குத்தில் ஒரு மாணவருக்கு 7 தையல் போடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள அந்தோணியார் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இன்று பள்ளி ஆண்டு விழாவிற்கு, நீலகிரி தொகுதி எம்.பி. ராஜா பங்கேற்க இருந்ததால் மும்முர பணியில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். இதில், 11ம் வகுப்பு மாணவர்கள் விளையாடி வந்துள்ளனர்.
அப்போது இரு மாணவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவர் பென்சில் சீவும் கத்தியால் மற்றொரு மாணவரை தாக்கியுள்ளார். இதில் இரு இடங்களில காயமடைந்த மாணவர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதுகு, கை பகுதிகளில் ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளது.தொடரந்து மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அப்பர் குன்னூர் காவல்துறையினர் கத்தியால் தாக்கிய மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டு விழாவிற்கு எம்.பி., ராஜா வருகை தருவதற்கு முன்னதாக, இதே
பள்ளிக்குள் மாணவருக்கு, கத்தி குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..