சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: உரிய நேரத்தில் வேட்பாளரை அறிவிப்போம். கருத்து கேட்டு, விருப்ப மனு பெற்று ஆலோசனை செய்து விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கூட்டணியில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது நாங்கள் தான். வாக்காளர்கள் முழுமனதோடு எங்களை ஆதரிப்பார்கள். பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே போட்டி நடக்கிறது. அதில், ஜனநாயகம் தான் வெற்றி பெறும்.
வேட்பாளர் விண்ணப்பத்தில் கையெழுத்து போடும் அதிகாரம் பழனிசாமிக்கு உள்ளது. இரட்டை சிலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.