ஒரே ஒரு ஆய்வறிக்கை... அதானி குழுமத்தின் ரூ.3.4 லட்சம் கோடி காலி!

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 27, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
நிதிசார் ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் பல நிறுவனங்கள் பணப்பற்றாக்குறையில் இருப்பதாகவும், செயற்கையாக பங்குகள் விலையை உயர்த்தி, அதன் மூலம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் புதனன்று அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி சரிந்த நிலையில், இன்று (ஜன., 27) மிகப்பெரும் அடி வாங்கியிருக்கிறது.
Adani, Hindenburg, Dinamalar, அதானி

நிதிசார் ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் பல நிறுவனங்கள் பணப்பற்றாக்குறையில் இருப்பதாகவும், செயற்கையாக பங்குகள் விலையை உயர்த்தி, அதன் மூலம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் புதனன்று அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி சரிந்த நிலையில், இன்று (ஜன., 27) மிகப்பெரும் அடி வாங்கியிருக்கிறது. இன்று மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.3.4 லட்சம் கோடி காலியாகியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் அதானி என்ற பெயர் தோன்றாத தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் இருக்க முடியாது. குறுகிய காலத்தில் அவரது நிறுவனத்தின் பங்குகள் மலையளவு உயர்ந்ததால், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் அவரது நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக அதிக மதிப்பீட்டில் இருப்பதாக நிபுணர்கள் முனுமுனுத்து வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது.


latest tamil news

2 ஆண்டுகாலம் ஆய்வு செய்து அந்த அறிக்கையை தயாரித்ததாக ஹிண்டன்பர்க் கூறியுள்ளது. அதில் பல ஆண்டுகாலமாக அதானி குழுமம், பங்கு விலையை கட்டுப்படுத்தி, மோசடித் திட்டங்களை செயல்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. எப்.பி.ஓ., மூலம் அதானி எண்டர்பிரைசஸ் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டிருந்த சமயத்தில் இந்த அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று அந்த எப்.பி.ஓ., 1 சதவீதம் மட்டுமே சப்ஸ்கிரைப் ஆகியுள்ளது.


ஒரே நாளில் 20% சரிவு


latest tamil news

புதனன்று இந்த அறிக்கை வெளியான சமயத்தில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி துடைத்து எறியப்பட்டது. இன்றைய தினம் அதானி குழுமத்திற்கு மிக மோசமான நாளாக மாறியுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி க்ரீன், அதானி டோட்டல் கேஸ் ஆகியவை ஒரே அடியாக 20 சதவீதம் சரிந்துள்ளன.

அதானி போர்ட்ஸ் 17%, அதானி பவர் 5%, அதானி வில்மார் 5% சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் இன்று மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.3.4 லட்சம் கோடி காலியாகியுள்ளது.

இது மட்டுமின்றி அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், கடன் கொடுத்த வங்கிகள், முதலீடு செய்த நிறுவனங்களின் பங்குகளும் விற்பனையை கண்டுள்ளன. எஸ்.பி.ஐ., வங்கிப் பங்கு 5% சரிந்துள்ளது. அதானி குழுமத்தில் அதிகம் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.,யின் பங்கு 3 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

தாமரை மலர்கிறது - தஞ்சை,கனடா
28-ஜன-202302:54:54 IST Report Abuse
தாமரை மலர்கிறது அதானி உலக முதல் பணக்காரர் ஆகிவிட்டால், இந்தியா வல்லரசாகிவிடும் என்ற பயத்தில் அமெரிக்கா பத்திரிகை உளறிக்கொட்டியுள்ளது.
Rate this:
Cancel
தாமரை மலர்கிறது - தஞ்சை,கனடா
28-ஜன-202301:58:38 IST Report Abuse
தாமரை மலர்கிறது அடானியின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி. அதனால், அடானிக்கு இந்தியா ஐந்து லட்சம் கோடி கடன் கொடுத்து, அடானியை உலகமுதல் பணக்காரர் ஆக்கி காட்டுவதே, அமெரிக்காவின் பொய் உரைக்கு கற்பிக்கப்படும் பாடம்.
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
27-ஜன-202320:52:09 IST Report Abuse
karuppasamy Modi thaan kavalai pada vendum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X