நிதிசார் ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் பல நிறுவனங்கள் பணப்பற்றாக்குறையில் இருப்பதாகவும், செயற்கையாக பங்குகள் விலையை உயர்த்தி, அதன் மூலம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் புதனன்று அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி சரிந்த நிலையில், இன்று (ஜன., 27) மிகப்பெரும் அடி வாங்கியிருக்கிறது. இன்று மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.3.4 லட்சம் கோடி காலியாகியிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் அதானி என்ற பெயர் தோன்றாத தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் இருக்க முடியாது. குறுகிய காலத்தில் அவரது நிறுவனத்தின் பங்குகள் மலையளவு உயர்ந்ததால், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் அவரது நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக அதிக மதிப்பீட்டில் இருப்பதாக நிபுணர்கள் முனுமுனுத்து வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது.
![]()
|
ஒரே நாளில் 20% சரிவு
![]()
|
அதானி போர்ட்ஸ் 17%, அதானி பவர் 5%, அதானி வில்மார் 5% சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் இன்று மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.3.4 லட்சம் கோடி காலியாகியுள்ளது.
இது மட்டுமின்றி அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், கடன் கொடுத்த வங்கிகள், முதலீடு செய்த நிறுவனங்களின் பங்குகளும் விற்பனையை கண்டுள்ளன. எஸ்.பி.ஐ., வங்கிப் பங்கு 5% சரிந்துள்ளது. அதானி குழுமத்தில் அதிகம் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.,யின் பங்கு 3 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.