பாதி யாத்திரையானது பாத யாத்திரை: ராகுல் பாதுகாப்பில் போலீசை காணோம்

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 27, 2023 | கருத்துகள் (27) | |
Advertisement
ஜம்மு: காஷ்மீரில் , பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், இன்று காஷ்மீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்றார். அவரை பார்க்க ஏராளமானோர் குவிந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் பாத யாத்திரை நிறுத்தப்பட்டது.கன்னியாகுமரியில் துவங்கிய ராகுலின் பாரத் ஜோடோ பாத யாத்திரை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்று ஸ்ரீநகரை நோக்கி 20
congress, rahul, rahulgandhi, kashmir, bharatjodoyatra, omar abdullah, காங்கிரஸ், ராகுல், ராகுல்காந்தி, காஷ்மீர், பாரத்ஜோடோ யாத்திரை,ஒமர் அப்துல்லா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜம்மு: காஷ்மீரில் , பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், இன்று காஷ்மீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்றார். அவரை பார்க்க ஏராளமானோர் குவிந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் பாத யாத்திரை நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரியில் துவங்கிய ராகுலின் பாரத் ஜோடோ பாத யாத்திரை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்று ஸ்ரீநகரை நோக்கி 20 கி.மீ., தூரம் ராகுல் நடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது.


latest tamil news


அவருடன் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லாவும் நடந்து சென்றார். சுமார் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாத யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. பனிஹல் சுரங்கப்பாதையை ராகுல் கடந்த நிலையில், அவரை பார்ப்பதற்காக ஏராளமானோர் குவிந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.


latest tamil newsஇது தொடர்பாக ராகுல் கூறுகையில், கூட்டத்தினரை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரை எங்கும் காணவில்லை. நாங்கள் சுரங்கப்பாதையை கடந்த பிறகு, போலீசார் பாதுகாப்பு சீர்குலைந்தது. எனது பாதுகாப்பு சரியானதாக இல்லை. பாத யாத்திரையை நிறுத்த வேண்டியதாகி விட்டது. எனது பாதுகாவலர்களுக்கு எதிராக செயல்பட முடியாது என்பதால், பாத யாத்திரையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும். இவ்வாறு ராகுல் கூறினார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் கூறுகையில், சுரங்கப்பாதையை கடந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு திடீரென திரும்ப பெறப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. இது பெரிய பாதுகாப்பு பிரச்னை. பாதுகாப்பு இல்லாமல், ராகுல் மற்றும் தொண்டர்கள் நடக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsகாங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், காஷ்மீர் நிர்வாகம் கூட்டத்தினரை சரியாக கட்டுப்படுத்தாததுடன், பாதுகாப்பை திடீரென திரும்ப பெற்றது. கூட்டத்தினர் நடுவில் ராகுல் சுமார் 30 நிமிடம் சிக்கி கொண்டார். அங்கிருந்து அவரால் எங்கும் நகர முடியவில்லை. அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் ராகுல் அழைத்து செல்லப்பட்டார். பாத யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-202317:49:29 IST Report Abuse
venugopal s பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே, அதற்குள் ஆவணப் படத்தை கண்டால் பயம், பாத யாத்திரையை கண்டால் பயம் என்று எல்லாவற்றுக்கும் பயந்தால் எப்படி?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
28-ஜன-202311:24:44 IST Report Abuse
Sridhar இந்த யாத்திரையின் நோக்கம்தான் என்ன? அரசியல் இல்லை என்றான். சரி. போகும் இடமெல்லாம் ஒரு வெறுப்பையும் பார்க்கவில்லை எல்லோரும் அன்புடன் இருந்தார்கள் என்றான், அதுவும் சரி. அப்போ யார் யாரோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள், யாரை யாரோடு இணைத்தான்? ED கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு யாத்திரை திட்டம்போட்டு அதற்க்கு கோடிக்கணக்கில் ஆடம்பர செலவுகள் செய்து ஒவ்வொரு நாளும் போட்டோ பிடிக்க நடை பாவலா செய்து வரும் ஒரு ஜாமீனிலிருக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மக்கள் வரிப்பணத்தில் போலீஸ் பாதுகாப்பு எதற்கு? இதில் ஒரே ஒரு நன்மை என்னவென்றால், அவன் அப்பப்போது உதிர்த்த முத்துக்கள் உள்ளே இருக்கும் நோயை மக்களுக்கு அம்பலப்படுத்தியது. உண்மையிலேயே எந்தமாதிரியான ஆள் என்பதை மக்களுக்கு தெளிவு செய்தது இதை சொந்த செலவிலேயே எவனாவது செய்வானா?
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
28-ஜன-202310:38:46 IST Report Abuse
Anand திமிர் பிடித்து அலையும் இந்த இத்தாலி மாபியாக்களுக்கு எதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X