வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத் :குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பான வழக்கில், சிறப்பு விசாரணை குழு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தொங்கு பாலத்தை பராமரித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலின் பெயர் பிரதான குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது.
குஜராத்தில் மோர்பி நகரின் மச்சுச்சூ ஆற்றின் மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்., 30ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
![]()
|
விபத்து நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், சிறப்பு விசாரணைக்குழு சார்பில், நீதிமன்றத்தில் 1,262 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேருடன், ஜெய்சுக் படேல் பெயரும் பிரதான குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது. 'பாலத்தை பராமரிப்பதிலும், இதில் ஒரே நேரத்தில் எத்தனை பேரை அனுமதிப்பது என்பதை முடிவு செய்வதிலும், ஒரேவா நிறுவனம் கவனக் குறைவாக செயல்பட்டது; இந்த விபத்து நடந்ததற்கு அந்த நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்' என, குற்றப்பத்திரிகையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.