வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பானாஜி: சொத்து தகராறில், பிரான்ஸ் நாட்டின் பழம் பெரும் நடிகை, கோவாவில் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் பழமையான நடிகை மரியானி போர்கோ,75, இவருக்கு வட கோவா மாநிலத்தில், கலான்க்யூட் என்ற இடத்தில் சொந்தமான வீடு உள்ளது.
இந்த வீடு தொடர்பாக, அவர் சிறைபிடிக்கப்பட்டு வைத்திருப்பதாக புகார் எழுந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் வழக்கு நிலுயைில் இருப்பதால், இதனை சிவில், வழக்கு என கருதி தலையிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.