சென்னை: குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.
![]()
|
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: தமிழ்நாட்டில் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையரால் ஆண்டு தோறும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த வழக்குகளை விசாரித்து வரும் உத்தரவை சென்னை ஐகோர்ட் புகையிலை பொருட்கள் மீதான விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில் முழு தடை விதிக்க வழிவகை செய்யவில்லை என தெரிவித்து உள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை தற்போது ரத்து செய்துள்ளது.
![]()
|
அதே நேரத்தில் நாடு முழுவதும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு ஆணையர்கள் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். எனவே சுப்ரீம் கோர்ட சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அரசு ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடி வு செய்துள்ளது. மேலும் தடையை தொடர்ந்து உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம் மற்றும் விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement