சத்தியமங்கலம்: பழைய பவானி ஆற்றுப்பாலம் இடிக்கும் பணி துவங்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கருங்கற்கள்,செங்கல் கொண்டு கட்டப்பட்டது.தற்போது போக்குவரத்து அதிகரித்து உள்ளதால் பழைமையான பாலத்தை இடித்து விட்டு 11கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு பழைய பாலத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழைய பாலத்தை இடித்துகொண்டிருந்த போது ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்து சென்றனர்.முழுவதுமாக இடித்த பின்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்படும்என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.