வேதாந்தா நிறுவனம் டிசம்பர் 2022 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 40.81% சரிந்து ரூ.2,464 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.4,164 கோடியாக இருந்தது.
வேதாந்தாவின் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்று மாத கால வருவாய் ரூ.33,691 கோடியாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ.33,697 கோடியாக இருந்தது. தற்போது வருவாய் 0.01 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் நான்காவது இடைக்கால டிவிடென்ட் ஆக பங்கு ஒன்றிற்கு ரூ.12.50 என ரூ.4,647 கோடியை ஒதுக்கியுள்ளனர். இதற்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி பிப்ரவரி 4, 2023 ஆகும். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வேதாந்தா நிறுவனப் பங்கு ஒன்றின் விலை சுமார் 2% சரிந்து, ரூ.320.45 ஆக உள்ளது. அதன்படி பார்க்கையில் டிவிடென்ட் ஈல்டு 4% ஆக உள்ளது.
![]()
|
காலாண்டு முடிவுப் பற்றி நிறுவனத்தின் சி.இ.ஓ., சுனில் துக்கல் கூறியதாவது: சவாலான மேக்ரோ பொருளாதார சூழலில் வலுவான நிதிநிலை முடிவுகளையும், நிலையான செயல்திறனையும் வழங்கியுள்ளோம். வேதாந்தா மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் இயக்குனர் குழு, ஹிந்துஸ்தான் ஜிங்கின் கீழ், ஜிங்க் இன்டர்நேஷனலை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியை துவங்கியுள்ளதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என கூறினார்.